கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

Madurai Minutes
0

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம்   மதுரை - இந்திய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின் ஆளுகைக்குட்பட்ட தேசிய கூட்டுறவு பயிற்சி கழகத்தின் (NCCT) கீழ் இயங்கும் 20 பயிற்சி நிறுவனங்களுள் ஒன்று!  இந்நிறுவனமானது கூட்டுறவு அமைப்புகள் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், உறுப்பினர்கள், இயக்குநர்கள் உட்பட அனைத்து சாராருக்கும் தரமான,  சிறந்த பயிற்சிகளை வழங்கி தென் தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகிறது. 


கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கழகத்தின் முதன்மை பயிற்சி பாடப்பிரிவான முழு நேர (26 வாரங்கள்), ஆங்கில வழி கூட்டுறவு மேலாண்மை உயர்நிலை பட்டயப்படிப்பில் (Higher Diploma in Cooperative Management) வரும் கல்வியாண்டில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.


இந்த பட்டயப்படிப்பானது இளைஞர்களுக்கான கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை வேலைவாய்ப்புகளுக்கான ஆரம்ப நிலை தகுதியாக கருதப்படுகிறது, இந்த பட்டயப்படிப்பில் கூட்டுறவு அமைப்பு மற்றும் செயல்பாடுகள், கூட்டுறவு கொள்கைகள், கூட்டுறவு சட்டங்கள், கூட்டுறவு கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கை,  கூட்டுறவு சந்தை மேலாண்மை, கூட்டுறவில் மனித வள மேலாண்மை உள்ளிட்ட பாடங்கள் கற்பிக்கப்பட்டு அவை இளம் தலைமுறையினரை  கூட்டுறவுத்துறையில் நிபுணத்துவம் பெறும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது! மேலும் இந்த பட்டயப்படிப்பை பெறுவதன் மூலம் அகில இந்திய அளவிலான கூட்டுறவு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பைப் பெற தகுதி பெறலாம்! எனவே இந்த பட்டயப்படிப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அதனை அனைத்து தரப்பினருக்கும் சென்று சேர்க்கும் விதத்தில் இந்நிறுவனத்தில் பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 


தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.01.2024, 5.00 PM மேலும் விவரங்களுக்கு  www.icmmadurai.in என்ற வலைதளத்தை காணவும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !