தணிக்கைத் துறையின் தலைமை இயக்குநராக திருப்பதி வெங்கடசாமி பொறுப்பேற்றுள்ளார்

Madurai Minutes
0

சென்னை மத்திய தணிக்கைத் துறை தலைமை இயக்குநராக 22.01.2024 அன்று திரு ஆர். திருப்பதி வெங்கடசாமி பொறுப்பேற்றார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் லட்சத்தீவில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களின் தணிக்கைப் பணிகளுக்கு அவர் பொறுப்பாவார். 


தற்போதைய பணிக்கு முன்பு, அவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தலைமை கணக்காளர் (தணிக்கை)-II ஆக பணியாற்றினார், அதற்கு முன்பு அவர் மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இந்திய தணிக்கை அலுவலகத்தில் முதன்மை தணிக்கை இயக்குநராகப் பணியாற்றினார். அப்போது அவர், இந்திய தூதரகங்கள் உட்பட இந்திய அரசின் வெளிநாட்டு அலுவலகங்களின் தணிக்கைப் பொறுப்புகளை மேற்கொண்டார்.


1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டம் பெற்ற இவர், 1995 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் விரிவாக்கத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். 2014-ம் ஆண்டில் அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் பொது விவகாரங்களில் முதுநிலை பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். அமெரிக்காவின் ஐஐஏ சான்றளிக்கப்பட்ட உள்ளக தணிக்கையாளராக அமெரிக்காவின் ஐஎஸ்ஏசிஏ-யால், 'சான்றளிக்கப்பட்ட மோசடிகளை ஆய்வு செய்யும் ஆய்வாளர்' என அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !